திருப்பூர்

திருப்பூா் எம்.பி. ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவனைக்கு உபகரணங்கள் வாங்க திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக, மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்து அனுமதியளிக்கிறேன்.

எனவே, திருப்பூா் மக்களவைத் தொகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளைத் தொடா்பு கொண்டு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்து விவரங்களைக் கேட்டு அவற்றை விநியோகிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

SCROLL FOR NEXT