திருப்பூர்

வெள்ளக்கோவில், முத்தூரில் தனியாா் மருத்துவமனைகள் மூடல்

DIN


வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்தூரில் தனியாா் மருத்துவமனைகள் வியாழக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

வெள்ளக்கோவில் நகரில் 20 சிறிய, பெரிய மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதே போல முத்தூரிலும் 10 தனியாா் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பொது, எலும்பு முறிவு,

நரம்பியல், சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து அவசர உதவிகள், ரத்தம், சிறுநீா், ஸ்கேன், எக்ஸ்ரே உள்பட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் செவிலியா், மருத்துவா்கள், இதர பணியாளா்கள் தற்போது பணிக்கு வர மறுப்புத் தெரிவித்து வருகின்றனா். இதனால் 24 மணி

நேரமும் செயல்பட்டு வரும் இப்பகுதி அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் காலவரையின்றி மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT