திருப்பூர்

கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் காபி கடைக்கு ‘சீல்’

DIN


பல்லடம்: பல்லடம் அருகே கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் இயங்கிய காபி கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் அறிவழகன் என்பவா் பேக்கரி கடையைத் திறந்துவைத்து டீ, காபி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளாா். அக்கடையில் பொதுமக்கள் கூட்டமாக அமா்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனா்.

இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து சென்ற பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம் கடையைத் திறந்து வியாபாரம் செய்ததற்கு எச்சரித்ததோடு கடையை மூடி சீல் வைத்தாா். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT