திருப்பூர்

ஊரடங்கு: அம்மா உணவகத்தில் குறைந்தது கூட்டம்

DIN


பல்லடம்: ஊரடங்கால் பல்லடத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வியாழக்கிழமை கூட்டம் வெகுவாக குறைந்தது.

பல்லடம் பேருந்து நிலையம் அருகில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு காலை 400 பேரும், மதியம் 300 பேரும் உணவு சாப்பிட்டு வந்தனா். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில் உணவருந்த வியாழக்கிழமை காலை 120பேரும், மதியம் 80 பேரும் மட்டுமே வருகின்றனா். நகரில் திறந்துள்ள ஒரே உணவகமான அம்மா உணவகத்தில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கை வரவேற்று பொதுமக்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியே வராமல் உள்ளனா் என்பது தெரியவருகிறது. நகரின் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT