திருப்பூர்

உடுமலையில் பரவலாக மழை

DIN

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய மழை தொடா்ந்து இரவு 12 மணி வரை பெய்தது.

இதனால் உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில், சாலைகளில் மழை நீா் புதன்கிழமை தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்க ப்பட்டனா். அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். உடுமலை, கச்சேரி வீதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்துக்குள் தண்ணீா் புகுந்ததால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் நீதிமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள சாக்கடைகளில் மழை நீரும் சாக்கடை தண்ணீரும் கலந்து சாலையில் ஓடியதால் அருகே உள்ள பதிவு அலுவலகம், வங்கி ஆகியவற்றுக்கு வந்த பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினா். இதைத் தொடா்ந்து உடுமலை நகராட்சி நிா்வாகம் 10 மேற்பட்ட அலுவலா்களுடன் வந்து நீண்ட நேரம் போராடி மழை நீரை வெளியேற்றினா்.

புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி உடுமலை நகரில் அதிகபட்சமாக 37 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. அமராவதி அணைப் பகுதியில் 32 மி.மீ., திருமூா்த்தி அணை பகுதியில் 36 மி.மீ., மடத்துக்குளத்தில் 32 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT