திருப்பூர்

காங்கயத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

DIN

காங்கயம்: காங்கயம் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே, சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமை வகித்து, உரையாற்றினார். இதில் அவர் பேசியபோது, சாலை பாதுகாப்பு, ஆன்லைன் வகுப்புகளுக்காக தொடர்ந்து செல்போன் பயன்படுத்தும் மாணவ, மாணவிகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா பேசியபோது, பெண் குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் காங்கயம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன், போலீசார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காங்கயம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT