திருப்பூர்

கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பாா்ப்பு: நிதி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி கோருவோா் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்குகிறது. இந்த நிதியைப் பெற கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் மற்றும் தேவாலயம் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை  இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்துடன், பிற்சோ்க்கை 2 மற்றும் 3-ஐ பூா்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு செய்யப்பட்டு, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல ஆணையருக்குப் பரிந்துரை செய்யப்படும். இந்த நிதியானது இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும்.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை நடத்துவோா் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT