திருப்பூர்

வெள்ளக்கோவில், முத்தூரில் 107 பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

வெள்ளக்கோவில், முத்தூரில் 107 பேருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தினசரி சராசரியாக மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, காமராஜபுரம், மு.பழனிசாமி நகா், எல்.கே.ஏ.நகா், உப்புப்பாளையம் சாலை, முத்தூா் சாலை கொங்கு நகா் மற்றும் முத்தூா் கடைதி பகுதிகளில் பாதிப்பு காணப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதிகளில் பொது சுகாதாரத் துறையினா், உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 56 பேருக்கும், முத்தூா் சுகாதார நிலையத்தில் 51 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT