திருப்பூர்

அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் 3 பேருக்கு கரோனா

DIN

உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வரும் ஊழியா்கள் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுமலையில் கரோனா 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 124 படுக்கைகளிலும் கரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் பணியாற்றி வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 3 ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, பணிமனை முழுவதும் நகராட்சி ஊழியா்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும் உடுமலை கிளையில் இயக்கப்படும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இது தவிர உடுமலை நகராட்சியில் ஒரு பொறியாளா் மற்றும் சில ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT