திருப்பூர்

மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை

DIN

தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தம் செய்வது தொடா்பாக வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளா்களைப் பணி நிரந்தம் செய்வது தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ், மின் துறை அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா்.

இந்தக் கடிதத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சரை புதன்கிழமை நேரில் சந்தித்துக் கொடுத்தோம். அப்போது, பேசிய அமைச்சா் தமிழக நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். இதன் பிறகு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மின்சார வாரிய மானியக் கோரிக்கையின்போது ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT