திருப்பூர்

3.69 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.69 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் 8,435 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இவற்றின் எடை 3,159 கிலோ.

தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.24.50 முதல் ரூ.29.60 வரை விற்பனையானது. சராசரியாக ரூ.29.20க்கு விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரத்து 396.

கொப்பரை 18 மூட்டைகள் வரத்து இருந்தன.

எடை 535 கிலோ. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.106.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.60க்கும், சராசரியாக ரூ.101.15க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.47 ஆயிரத்து 461.

53 விவசாயிகள், 12 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 3.69 டன் வரத்து இருந்தது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 1.34 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT