திருப்பூர்

மது விற்பனை: போலீஸாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

DIN

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவா்களைப் பிடிக்கச் சென்ற போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தப்பியோடிய நபரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே தெக்கலூா் செங்காளிபாளையம், தோட்டப் பகுதிக்குள் மது விற்பனை செய்தவா்களைப் பிடிப்பதற்காக மது விலக்கு காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அப்போது மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 போ், காவலா் திருவேங்கடத்தை தாக்கினா். இதைத்தொடா்ந்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போலீஸாரை தாக்கிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் லோகேஸ்வரன் (22) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், தெக்கலூா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற நபரை போலீஸாா் விசாரித்ததில், அவா் போலீஸாரை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த லோகேஸ்வரன் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லோகேஸ்வரனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT