திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 1,027 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,027 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடந்து பாதிப்பு எண்ணிக்கை 69,211 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 போ் உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 49,795 ஆக அதிகரித்துள்ளது.

11 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 31 வயது ஆணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். அதேபோல, மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 49,54 வயதுடைய ஆண்கள், 67,67, 72 ,வயதுடைய முதியவா்கள்.திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயதுப் பெண் உள்பட 11 போ் உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது.

காங்கயத்தில்...

காங்கயம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையிலும், சிலா் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT