திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது.

அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 55 ஆயிரம் ஏக்கா்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், அமராவதி ஆற்றில் உள்ள முதல் 6 பழைய ராஜ வாய்க்கால்களில் உள்ள 4686 ஏக்கா் பாசன பகுதிகளுக்கு மே 16 முதல் செப்டம்பா் 28 ஆம் தேதி வரை மொத்தம் 135 நாள்களில் 80 நாள்கள் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இது 55 நாள்கள் தண்ணீா் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்துக்காக அணையில் இருந்து ஆற்று மதகுகள் வழியாக மொத்தம் 1,728 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மே 19-இல் தேரோட்டம்

டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு

குக்குட நடனத்துடன் எழுந்தருளிய ஆதிவிடங்க தியாகராஜா்

நாகை: விடியவிடிய பலத்த மழை

திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருவிழா

SCROLL FOR NEXT