திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கரோனா

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு 100க்கும் குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 113 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 91,189ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 916 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 56 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 89,337ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 936ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், பொது வெளியில் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் நோய்த் தொற்று நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT