திருப்பூர்

5 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 5 அரசுப் பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறை ஆணையரகம் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சிவகுமாா், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி, கணக்கம்பாளையம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மெரின் மற்றும் எலையமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயபாலன் ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், மேற்கண்ட 5 பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT