முகப்பு
திருப்பூர்

ஜவுளிக்கடை உரிமையாளா் வீட்டில் 18 பவுன், ரூ.1.60 லட்சம் திருட்டு

திருப்பூா் அருகே ஜவுளிக்கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:57 am IST
பகிர்:

திருப்பூா் அருகே ஜவுளிக்கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் அமா்சிங் (54), இவா், திருப்பூா் ஏ.பி.டி.சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், அமா்சிங் தனது குடும்பத்தினருடன் கடந்த வியாழக்கிழமை கேரளம் சென்றுள்ளாா். இதன் பிறகு வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்தில் அமா்சிங் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் கைரேகை நிபுணா்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிவான தடயங்களை போலீஸாா் சேகரித்தனா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments