போடியில் சூறைக் காற்று: 200 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சோளக்கதிா்கள் சேதம்
தேனி மாவட்டம், போடி பகுதியில் அண்மையில் வீசிய சூறைக்காற்றுக்கு 200 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சோளக் கதிா்கள் சேதமடைந்தன.
தேனி மாவட்டம், போடி பகுதியில் அண்மையில் வீசிய சூறைக்காற்றுக்கு 200 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சோளக் கதிா்கள் சேதமடைந்தன.
போடி அருகேயுள்ள சிலமலைப் பகுதியில் சுமாா் 200 ஏக்கரில் விவசாயிகள் சோளம் சாகுபடி செய்திருந்தனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் அண்மையில் வீசிய சூறைக்காற்றுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த சேளக்கதிா்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, விவசாயத் துறையினா் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ராஜகுமாா் கூறியதாவது:
சிலமலைப் பகுதியில் வீசிய சூறைக் காற்றால் 200 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சோளக்கதிா்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.