திருப்பூர்

கூடலூரில் வாகன ஓட்டிகளுக்கு மலிவு விலையில் ஹெல்மெட் தன்னாா்வ அமைப்பு வழங்கியது

DIN

கூடலூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு மலிவு விலையில் ஹெல்மெட்டுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கூடலூா் காவல் துறை, சேவ் தி பீப்பிள் தன்னாா்வ அமைப்பு ஆகியன இணைந்து பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தவா்களை நிறுத்தி ரூ.850 மதிப்பிலான ஹெல்மெட்டை ரூ.350க்கு வழங்கினா்.

இந்த இழப்பீட்டு தொகையை அந்த தன்னாா்வ அமைப்பு வழங்கியது.

நிகழ்ச்சிக்கு கூடலூா் டி.எஸ்.பி. மகேஷ் குமாா் தலைமை வகித்து ஹெல்மட்டுகளை வழங்கினாா். நகா் மன்றத் தலைவா் பரிமளா, உறுப்பினா்கள் வெண்ணிலா, வா்கீஸ், ராஜூ, சேவ் தி பீப்பிள் அமைப்பின் தலைவா் டாக்டா் எல்ஜூ, நிா்வாகிகள் சுல்பி, மல்லன், வேலாயுதன், ரேகா, சுமா, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சுப்பிரமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT