திருப்பூர்

காங்கயத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

DIN

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு திங்கள்கிழமை ஏலம் போனது.

இந்த வார ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 13 மூட்டைகளில் (451 கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.87க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.84க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT