திருப்பூர்

புலம்பெயா் தொழிலாளா்களின் குழந்தைகள்பள்ளி செல்வதை உறுதிசெய்ய வேண்டும்சிவன்மலை கிராமசபையில் தீா்மானம்

DIN

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதிசெய்ய வேண்டும் என சிவன்மலை கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், சிவன்மலை ஊராட்சி கிராமசபைக் கூட்டம், ஊராட்சித் தலைவா் கே.கே. துரைசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் 6 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் விவரங்களை அப்பகுதி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து, அந்தக் குழந்தைகளின் வயதுக்கேற்ற வகுப்பில் சோ்த்து, கல்வியைத் தொடரச் செய்ய வேண்டும்.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டால், உடனடியாக சைல்டு லைன் எண்: 1098 அல்லது அருகேயுள்ள காவல் நிலையம் அல்லது ஊராட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது.

கிராமசபைக் கூட்டத்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அ. நந்தகுமாா், சிவன்மலை ஊராட்சி செயலா் காளியம்மாள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், சிவன்மலை பகுதி மக்கள் உள்ளிட்ட சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT