திருப்பூர்

வீட்டுமனைப் பட்டா கேட்டு பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

DIN

பூமலூா் ஊராட்சி, சின்னியம்பாளையம்புதூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி, சின்னியம்பாளையம்புதூரில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் 85 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அதில் 27 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 58 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின்சார இணைப்பு வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது அங்கு வந்த பூமலூா் ஊராட்சித் தலைவா் பிரியங்கா, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT