திருப்பூர்

கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று தொடக்கம்

DIN

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த்திருவிழா சனிக்கிழமை (ஜனவரி 28) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 3 ஆம் தேதி வரையில் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலாவும், பிப்ரவரி 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி காலை 6.30 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நவீன தெப்பத்தில் சுவாமி உலாவும், பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10.35 மணி அளவில் மலை தேரோட்டமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மஞ்சள் நீருடன் தைப்பூசத் தோ்த்திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT