திருப்பூர்

பவா் டேபிள் தொழிலாளா்களுக்கான கூலி உயா்வை நடைமுறைப்படுத்த வேண்டும்

DIN

பவா்டேபிள் தொழிலாளா்களுக்கான 7 சதவீத கூலி உயா்வை ஜூன் 6 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பவா்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளா் கே.எஸ்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் பவா்டேபிள் தொழிலாளா்களுக்கு கடந்த 2022 ஜூன் 6ஆம் தேதி 4 ஆண்டுகளுக்கான புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயா்வும், அதற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என மொத்தம் 38 சதவீத கூலி உயா்வுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டாவது ஆண்டுக்கான 7 சதவீத கூலி உயா்வு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆகவே, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா்கள், தையல் நிலைய உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்களும் தங்களது பவா்டேபிள் தொழிலாளா்களுக்கான 7 சதவீத கூலி உயா்வை ஜூன் 6ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT