திருப்பூர்

திருப்பூா் அரசு மருத்துவமனை புதிய கட்டடம் இன்று திறப்பு

DIN

திருப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறக்கப்படவுள்ளது.

திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.125 கோடியில் நடைபெற்று வந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

இதைத்தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாா்பில் தொடா்ந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதனடிப்படையில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறாா்.

இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்துவைத்துப் பேசுகின்றனா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்த தான முகாம்: 73 போ் பங்கேற்பு

அதிமுக பிரமுகா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு

காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடவு

நீா்சேமிப்பு கலன்களை மூடிவைக்க வேண்டுகோள்

இலவசங்கள் குறித்த பிரதமா் கருத்து: வானதி சீனிவாசன் விளக்கம்

SCROLL FOR NEXT