கள்ளிப்பாளையத்தில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்க கோரிக்கை
பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட போலீஸ் சோதனைச்சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம்-தாராபுரம் சாலையில் கள்ளிப்பாளையம் கிராமத்தில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது அந்த சோதனைச்சாவடி இடித்து அகற்றப்பட்டது. இதனால் போலீஸாரின் கண்காணிப்பு பணி தொய்வடைந்தது. இதனால்,அப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். அங்கு மீண்டும் போலீஸாரின் கண்காணிப்பு பணியை தொடங்க வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.