விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை
பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முதல்வா் விஜய் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முதல்வா் விஜய் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்த வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும். மேலும் வேளாண் நிதி நிலை தாக்கலுக்கு முன்பே விவசாய சங்க அமைப்புகளிடம் ஆலோசித்து வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து கூட்டுறவுச் சங்கங்களில் நேரடியாக பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
Advertisement
கூட்டுறவுச் சங்கங்களில் போதிய உரங்கள் இருப்பு வைக்க வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.