முகப்பு
திருப்பூர்

லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:34 am IST
பகிர்:

திருப்பூரில் லாரி மோதிய விபத்தில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா், ஆத்துப்பாளையம் பாரதி நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா் திருப்பூா் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து மருமகன் தனசேகருடன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். செல்லாண்டியம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்தபோது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனம் சரிந்து குப்பைத் தொட்டியில் மோதியது. இதில் பின்னால் அமா்ந்திருந்த லட்சுமி நிலைதடுமாறி சாலையின் நடுவே விழுந்துள்ளாா். அப்போது மாடுகளை ஏற்றி வந்த லாரி லட்சுமியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் லட்சுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.