முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் கஞ்சா கடத்தல்: சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது!

திருப்பூரில் கஞ்சா கடத்தல் பற்றி...

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 3:04 PM
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம்
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 3:00 PM

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை காரில் கடத்தி வந்த மூன்று சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், நல்லூர் சரக காவல் உதவி ஆணையர் தையல் நாயகி தலைமையில் வீரபாண்டி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் காவல்துறையினர் அய்யம்பாளையம் நால்வரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 5 இளைஞர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபடுவதைக் கண்ட அந்த நபர்கள் உடனடியாக காரை திருப்பி தப்பிச் செல்ல முயற்சி செய்தனர்.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 3:03 PM

தொடர்ந்து திருப்பி சென்ற காரை துரத்திப் பிடித்து, விசாரித்தனர். விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் காரை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சா பொருள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வீரபாண்டி போலீஸார் அனைவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (வயது 24),ஆகாஷ் (வயது 24), திருவள்ளுவர் பகுதியைச் சேர்ந்த விஷால் (வயது 18), சஞ்சய் (வயது 18 ), ஜனார்த்தனன் (வயது 18) என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகக் கஞ்சா பொருள்களை வாங்கி வந்து தமிழக முழுவதும் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீஸார் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா, பொருள்களைப் பறிமுதல் செய்து மூன்று சிறுவர்கள் உள்பட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

summary

Five people, including three minors, have been arrested in Tiruppur for smuggling ganja, which is banned by the Tamil Nadu government, in a car.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.