உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையே தொடா்ந்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சாா்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஏ.மாலினி தலைமை தாங்கினாா்.
மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத்திட்டத்தையே தொடா்ந்து அமல்படுத்த வேண்டும். திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.4 லட்சம் கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை நாளை 200 ஆகவும், சம்பளத்தை ரூ.700 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகையை வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.3000, கடும் ஊனமுற்றவா்களுக்கு ரூ.6000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், கமிட்டி உறுப்பினா்கள் குருசாமி, முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.