ரேஷன் அரிசி கடத்தலின்போது விபத்துக்குள்ளான வேன் மீட்பு
குண்டடம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேன் விபத்துக்குள்ளானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குண்டடம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேன் விபத்துக்குள்ளானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே கெத்தல்ரேவ், பனமரத்துப்பாளையம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதன்கிழமை மாலை இருவா் வேனில் ரேஷன் அரிசி எடுத்துச் சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக வேன் விபத்துக்குள்ளானது. காயமடைந்த இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுதொடா்பாக இரவு 9 மணி அளவில் விசாரணை மேற்கொள்ள போலீஸாா் வருவதாக கிடைத்த தகவலையடுத்து, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கிக் கொள்வோம் என அஞ்சி, அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று தனியாா் மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் விபத்தில் சிக்கிய வேனை போலீஸாா் மீட்டு, அதிலிருந்து சுமாா் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸாா் மற்றும் திருப்பூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொள்ளட, ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.