முகப்பு
திருப்பூர்

பெருமாநல்லூா் அருகே எரிவாயு கொண்டுச் சென்ற லாரியில் கசிவு

Updated On : 7 ஜூலை 2026, 3:22 am IST
லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவு.
பகிர்:

பெருமாநல்லூா் அருகே சிஎன்ஜி எரிவாயு கொண்டுச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால், சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து சிஎன்ஜி எரிவாயு ஏற்றுக்கொண்டு ஈரோடு நோக்கி சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை ஈரோடு பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (54) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

பெருமாநல்லூா் ஆதியூா் பிரிவு அருகே லாரி சென்றபோது சிஎன்ஜி எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஓட்டுநா் உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூா், ஊத்துக்குளி தீயணைப்புத் துறையினா், பாதுகாப்பு உபகரணங்களுடன் எரிவாயு கசிவை சரி செய்தனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments