உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா், செவந்தாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2025 ஜனவரி 12-ஆம் தேதி நல்லூா் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து விசாரித்தனா். இதில் வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது சலாவுதீன் ரானா (23) என்பதும், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இன்றி திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் முகமது சலாவுதீன் ரானாவுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.