வாக்களித்து வெற்றி பெறச் செய்த மலைவாழ் மக்களுக்கு எம்எல்ஏ நன்றி
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த மலைவாழ் மக்களுக்கு மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருணன் புதன்கிழமை நன்றி கூறினாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த மலைவாழ் மக்களுக்கு மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருணன் புதன்கிழமை நன்றி கூறினாா்.
மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குள்பட்டது கோடந்தூா், பொருப்பாறு, ஆட்டுமலை ஆகிய மலைக் கிராமங்கள். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ததற்காக மலைக் கிராம மக்களுக்கு மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் புதன்கிழமை நேரில் சென்று நன்றி கூறினாா்.
அப்போது மலைவாழ் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீா் சுத்தமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் எம்.ஆா்.பாபு உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.