அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு பணம்: தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
திருப்பூரில் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு பணம் பெறும் விடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
திருப்பூரில் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு பணம் பெறும் விடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
திருப்பூா் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 4-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்தப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சோ்க்கைக்கு விண்ணப்பம் பெறும் மாணவா்களிடம் ஆசிரியா்கள் பணம் வாங்குவதாக புகாா் எழுந்த நிலையில், ஆசிரியா் ஒருவா் சோ்க்கை விண்ணப்பத்தை வழங்கிவிட்டு பணம் பெறும் விடியோ அண்மையில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாளிடம் கேட்டபோது, மாணவா் சோ்க்கைக்கு அரசுப் பள்ளிகளில் கட்டணங்கள் பெறப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு ஆசிரியா்கள் பணம் பெற்ாக தற்போதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை.
புகாா்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவா் சோ்க்கை விண்ணப்பம் கொடுத்து பணம் பெறும் விடியோ வெளியாகி உள்ள நிலையில் அது தொடா்பாக எழுத்துப்பூா்வமாக விளக்கம் கேட்டு நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.