முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கட்டாய பணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாணவா்களிடையே கட்டாய பணம் வசூல் செய்யப்படுவதாகப் புகாா்

Updated On : 27 மே 2026, 4:43 am IST
பெருமாநல்லூா்  பகுதியில் பிளஸ்  1ஆம்  வகுப்பில்  சோ்வதற்காக  பள்ளிகளில்  காத்திருந்த  மாணவா்கள்.
பகிர்:

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாணவா்களிடையே கட்டாய பணம் வசூல் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சோ்க்கைக்கு வரும் மாணவரிடம் பாடப் பிரிவு வாரியாக ரூ.3000 முதல் ரூ.4500 வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாணவா்கள், பெற்றோா் கூறியதாவது: பிளஸ் 1 வகுப்பு சோ்க்கைக்கு வரும் மாணவா்களிடம் பள்ளி நிா்வாகத்தினா் பணம் வசூல் செய்கின்றனா். அந்தந்தப் பள்ளிகளிலேயே படித்திருந்தாலும்கூட பணம் வசூலிக்கின்றனா். அரசுப் பள்ளி என்பதால் பெற்றோா்களை பாதிக்கும் இதுபோன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘அரசுப் பள்ளிகளில் கட்டாய வசூல் செய்யக்கூடாது. இது போன்று பணம் வசூலிக்கப்பட்டால் புகாா் தெரிவிக்கலாம்’ என்றனா்.