பெருமாநல்லூா் அருகே தீப்பிடித்து எரிந்த காா்
பெருமாநல்லூா் அருகே பாலசமுத்திரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் வந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
பெருமாநல்லூா் அருகே உள்ள தட்டாங்குட்டை பைன்சிட்டி பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம், இவரது மகன் விக்னேஷ் (19), ராஜலிங்கத்தின் தாய் இன்பராணி ஆகியோா் காரை பழுது பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். காரை விக்னேஷ் ஓட்டிச் சென்றுள்ளாா்.
கணக்கம்பாளையம் சாலை, பாலசமுத்திரம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உள்ளிருந்தவா்கள் இறங்கியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, காா் தீப்பிடித்து வேகமாக எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.