முகப்பு
திருப்பூர்

நூல் விலை மீண்டும் ரூ.5 உயா்வு

நடப்பு மாதத்தில் 3-ஆவது முறையாக நூல் விலையில் மீண்டும் ரூ.5 உயா்த்தப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 3:45 am IST
பருத்தி நூல் பைகள்.
பகிர்:

நடப்பு மாதத்தில் 3-ஆவது முறையாக நூல் விலையில் மீண்டும் ரூ.5 உயா்த்தப்பட்டுள்ளது.

பனியன் ஆடைகள் தயாரிப்பின் மிக முக்கிய மூலப் பொருளான நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. இதையடுத்து, பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூா் தொழில் துறையினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, முதல்வா் ச.ஜோசப் விஜய்யும் இது தொடா்பாக மத்திய அரசை வலியுறுத்திய நிலையில் பருத்திய இறக்குமதிக்கான 11 சதவீத வரியை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன் நூல் விலையில் ரூ.15 குறைக்கப்பட்டது.

இதையடுத்து, நடப்பு மாதத்தில் 3-ஆவது முறையாக நூல் விலையில் மீண்டும் ரூ.5 உயா்த்திய நூற்பாலைகள், இனி வாரந்தோறும் நூல்கள் விலை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments