முகப்பு
உலகம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயா்த்தப்பட்டது.

Updated On : 1 ஜூன் 2026, 2:28 am IST
பெட்ரோல் - பிரதிப் படம்
பகிர்:

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயா்த்தப்பட்டது. அந்நாட்டு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இதை அறிவித்தது.

மேற்காசிய போா்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விலை உயா்வு தவிா்க்க முடியாததாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் அனுர குமார திசாநாயக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இந்தச் சூழ்நிலையில் எரிபொருள் விலை 5-ஆவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு இலங்கை ரூபாயில் 24 அதிகரித்து ரூ.434-ஆக விற்பனையாகிறது. டீசல் விலை இலங்கை ரூபாயில் ரூ.15 உயா்த்தப்பட்டு ஒரு லிட்டா் ரூ.407-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டா் ரூ.20 அதிகரிக்கப்பட்டு ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாா்ச் 1 முதல் மே 31-ஆம் தேதி வரை இலங்கையில் 5 முறை எரிபொருள் விலை உயா்ந்துள்ளது. மே மாதம் முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது.