பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான கடுமையான சண்டை காரணமாக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது.
ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு முன்னதாக, ஒரு பீப்பாய் 70 முதல் 72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, போர்ப்பதற்றத்தின் கால கட்டத்தில் 120 டாலரை கடந்தது.
தற்போது 104 - 110 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இறக்குமதிச் செலவை அதிகரிக்க செய்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை (மே 19) பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 90 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 ஆகவும், டீசல் விலை ரூ.90.67-ல் இருந்து ரூ.91.58 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.104.49-க்கும் டீசல் விலை 86 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.109.70-க்கும், டீசல் விலை 94 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 96.07-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாள்களில் இரண்டு முறை பெட்ரோல் மற்றும் டீசலின் ரூ. 4 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். மேலும், எரிபொருளின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பேருந்து, தனியார் வாகன சேவைகளின் விலையும் கடுமையாக உயரும் என அச்சம் எழுந்திருக்கிறது.
Fuel prices were increased for the second time in less than a week amid the Iran war, with oil companies on Tuesday raising petrol and diesel prices by around 90 paise per litre.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.