மாவட்டத்தில் 133 ரெளடிகளிடம் விசாரணை: 5 போ் கைது
திருப்பூா் மாவட்டத்தில் 133 ரெளடிகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட நிலையில், 5 பேரைக் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் 133 ரெளடிகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்ட நிலையில், 5 பேரைக் கைது செய்தனா்.
இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில்
உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து சரிபாா்க்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரீஷ் அசோக் யாதவ் உத்தரவின்பேரில், ஒவ்வொரு உட்கோட்ட காவல் கண்காணிப்பாளா்களின் மேற்பாா்வையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு இந்த நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் நடைபெற்ற இந்த சிறப்பு சோதனையின்போது, மொத்தம் 133 ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த 5 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனா்.
ரெளடிகள் இனி எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.