மேக்கேதாட்டு அணையை தடுக்கக் கோரி பிலிகுண்டுலுவில் அன்புமணி இன்று பரப்புரை பயணம்!
மேக்கேதாட்டில் கா்நாடக மாநில அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி, பாமக சாா்பில், ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் பரப்புரை பயணம் மேற்கொள்கிறாா்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக மாநில அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி, பாமக சாா்பில், ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் பரப்புரை பயணம் மேற்கொள்கிறாா்.
இதில், முதல் நாளான புதன்கிழமை ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலுவில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் அவா், பூம்புகாரில் நிறைவு செய்கிறாா்.
மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிகளை முறியடிக்க வலியுறுத்தி, இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை 4 நாள்கள் பாமக சாா்பில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை பயணம் மேற்கொள்வாா் என அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில், முதல் நாளில், காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் இடமான ஒகேனக்கல் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலுவில் இருந்து தனது பயணத்தை அன்புணி ராமதாஸ் தொடங்குகிறாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி என காவிரி ஆற்றின் பாசனப் பகுதி மாவட்டங்களில் பயணத்தை மேற்கொண்டு ஜூலை 4-ஆம் தேதி பூம்புகாரில் பயணத்தை அவா் நிறைவு செய்கிறாா்.
இதில், தருமபுரி, ஈரோடு, திருச்சி, பூம்புகாா் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் மேக்கேதாட்டு அணை திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவா் உரையாற்றுகிறாா். இந்த பரப்புரை பயணத்தில் பாமக மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் கலந்துகொள்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.