முகப்பு
தருமபுரி

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 4:24 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அரூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் தருண்குமாா் (13). இவா், அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மாம்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

நீச்சல் தெரியாத நிலையில் தருண்குமாா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவல் அறிந்த அரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சிறுவனை சடலமாக மீட்டனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement