தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
தருமபுரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (36). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருமத்தூா் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குடும்பத்தினா், நண்பா்களுடன் சென்றாா். ஆற்றில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.