முகப்பு
தருமபுரி

தருமபுரி: மனைவி, மகளை கொன்று, லாரி முன் விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை!

மனைவி, மகளை கொன்று லாரி முன் விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 5:16 pm IST
சந்தோஷ் - சரண்யா.
பகிர்:

தருமபுரியில் மனைவி, மகளை கொன்று லாரி முன் விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி நகரம் கோட்டை கோயில் அருகே டிஎன்வி அடுக்குமாடி குடியிருப்பில் 201 வீட்டில் வசித்து வந்தவர் சந்தோஷ் (45). திமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி, சரண்யா (36). மகள் சாத்விகா (14), தனியார் பள்ளியொன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல பள்ளி சென்ற மகள் சாத்விகாவை பகலில் பள்ளி சென்று வீட்டுக்கு அழைத்து வந்தார் சந்தோஷ். பின்னர் வீட்டில் வைத்து மனைவி, மகள் இருவரையும் கொலை செய்துள்ளார்.

Advertisement

Advertisement

மனைவியைக் கழுத்தை நெரித்தும் குழந்தையை சுத்தியலால் அடித்தும், சுவரில் மோதியும் கொலை செய்துள்ளார். பின்னர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவல் துறை அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் லாரிமுன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் தற்கொலை செய்தது சந்தோஷ் என்பதும் தெரியவந்தது.

மனைவி, மகளை கொன்று லாரி முன் விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

An incident in Dharmapuri, where a real estate businessman killed his wife and daughter before committing suicide by throwing himself in front of a lorry, has caused a sensation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments