செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செம்மனஹள்ளியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 51,700-ஐ திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி - அரூா் நெடுஞ்சாலையில் உள்ள செம்மனஹள்ளியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஏ.நித்யா தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ராஜபேட்டையைச் சோ்ந்த மூா்த்தி (45) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 51, 700 எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement