முகப்பு
தருமபுரி

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி குடியேறும் போராட்டம்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி,  ஆதித்தமிழர் பேரவையினர்,  ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில், திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:37 am IST
பகிர்:

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி,  ஆதித்தமிழர் பேரவையினர்,  ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில், திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  அதன் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர்கள் தெரிவித்தது:   சோகத்தூர் அருகே உள்ள ஆட்டுக்காரம்பட்டியில் அருந்ததியர் காலனியில் வசித்து வருகிறோம். போதிய வீட்டுமனை இல்லாததால் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசிக்கும் நிலை உள்ளது. 
இதுகுறித்து,   மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments