முகப்பு
தருமபுரி

கிராம சபைக் கூட்டத்தை முறையாக நடத்தக் கோரி மனு

கிராம சபைக் கூட்டத்தை சட்டத்துக்கு உள்பட்டு முறையாக நடத்தக் கோரி,  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:37 am IST
பகிர்:

கிராம சபைக் கூட்டத்தை சட்டத்துக்கு உள்பட்டு முறையாக நடத்தக் கோரி,  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் அளித்த மனுவின் விவரம்: கிராம சபை என்பது  மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பின் அடிநாதம் போன்றது. கிராமத்தின் பலம் வாய்ந்த அமைப்பாகும். எனவே, மாவட்ட நிர்வாகமும்,  தமிழக அரசும் ஆண்டுக்கு நான்குமுறை கட்டாயம் கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகின்றன. ஆனால், கிராம சபைக் கூட்டம் குறித்து உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக விளம்பர அறிவிப்புகள் செய்யப்படுவது இல்லை. இந்தக் கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் சேருவதில்லை. இதனால், கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் பங்கேற்கின்றனர். சமூகத் தணிக்கையின் போது, பொதுமக்கள் கோரும் கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, கிராம சபைக் கூட்டத்தை சட்டப்படி முறையாக நடத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments