தருமபுரி

வனப்பகுதியில் மணல் எடுத்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

DIN

தீர்த்தமலை அருகே வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்த இருவருக்கு வியாழக்கிழமை ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தீர்த்தமலை வனச்சரகர் எஸ்.தண்டபாணி தலைமையிலான வனத் துறையினர் பூவம்பட்டி, நல்லவன்பட்டி காப்புக் காடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் லாரியில் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய நல்லவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதுரைமுத்து மகன் செந்தில் (30), சின்னதம்பி மகன் சம்பத் (34) ஆகிய இருவரையும் வனத் துறையினர் கைது செய்து, அரூர் மாவட்ட வன அலுவலர் எஸ்.செண்பகப் பிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, வனப் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT