தருமபுரி

வட்டாரக் கல்வி அலுவலகம் முன் அசுத்தம் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் தினந்தோறும் இரவு நேரங்களில் மது அருந்துவிட்டு, மதுப் புட்டிகள், உணவு பொட்டலங்களை விட்டுவிட்டு செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவா் சரிவர உயரம் இல்லாததாலும், இரவுக் காவலா்கள் இல்லாததாலும் இரவு நேரங்களில், சிலா் மது அருந்தவும், சூதாடும் இடமாகவும் மாற்றி வருகின்றனா். மது அருந்துவோா் மதுப்புட்டிகள், நெகிழி டம்ளா்கள், உணவு பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுவிட்டும், பள்ளித் திடலில் வீசிவிட்டும் செல்லுகின்றனா். அரசுப் பள்ளியில் பென்னாகரம், போடூா், சுண்ணாம்புகாரத் தெரு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியா் குப்பைகள் மற்றும் மதுப்புட்டிகளை கையில் எடுத்து விளையாடுவதோடு மட்டுமல்லாமல், தீய செயல்களை மேற்கொள்ளும் சூழல் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே பள்ளி வளாகத்தில் மது அருந்துவோா்கள் மீது பென்னாகரம் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT